விஜய் பற்றி எனது வலைபதிவில் எழுத கூடாது என்று இருந்தேன், எழுத வைத்து விட்டார்கள் .
ஒரு காலத்தில் ஆனந்தவிகடன் திரை விமர்சனம் என்பது திரை உலக்தினரே பாராட்டும் ஒரு சிறந்த பகுதியாக இருந்தது. சிறந்த நடிகர்களும் இயக்குனர்களும் தங்களது படங்களுக்கு அது ஒரு உரைகல்லாக இருந்ததாக பேட்டிகளில் கூறுவார்கள் .ஆனால் இப்போது .........?
சர்வ சாதாரணமாக அணைத்து படங்களுக்கும் 40 மதிப்பெண்கள் வழங்குவது என்பது நடந்து வருகிறது .அட பாராட்டி எழுதி 40 மதிப்பெண்கள் வழங்கினால் கூட சரி போனால் போகுது என்று விட்டு விடலாம் , ஆரம்பம் முதல் கடைசி வரை அது சரி இல்லை இது மொக்கை என்று சொல்லி விட்டு மதிப்பெண்கள் மட்டும் வாரி வழங்குவது என்பது மனதுக்கு பொறுக்கவில்லை ....
வேட்டைக்காரன் விமர்சனத்தில் ஒரே ஒரு இடத்தில மட்டும் விஜய் யை பாராட்டுவது போல பாராட்டி விட்டு பின் காலை வாரி விடுகிறார்கள் ..... சத்யனை மட்டும் தான் பாராட்டுகிறார்கள் .... ஆரம்பத்தில் நான்கு படங்களின் கலவை தான் இது என்றும், விஜய் படங்களின் பழைய மசாலா தான் என்றும் , வில்லன்கள் காட்டு கத்து கத்துகிறார்கள் என்றும் , கதாநாயகி ஆன்ட்டி போல இருக்கிறார் என்றும் ,லாஜிக் இல்லை என்றும் , விஜய் யின் நடனமும் நன்றாக இல்லை என்றும், பார்த்து சலித்த பழைய புலி என்றும், உறுமுவது இருமுவது போல உள்ளது என்றும் சொல்லி விட்டு மதிப்பெண் மட்டும் 38 வழங்குவது எந்த ஊர் நியாயம் என்று விளங்க வில்லை .....
ஒரு காலத்தில் மணிரத்தினம் படங்களும் பாலசந்தர் படங்களும் பாரதிராஜா படங்களும் சில உண்மையிலே நல்ல படங்களும் மட்டுமே பெற்று வந்த மதிப்பெண்கள் இப்போது சாதரணமாக அரைத்த மசாலாவையே அரைக்கும் படங்களும் பெறும் போது அந்த படங்களின் மதிப்பு குறைவது போல இருக்கிறது ஆனந்தவிகடன் விமர்சன குழுவின் மதிப்பும் குறைந்து வருவது போல உள்ளது....