ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

இ பி லீ

            இந்தியன் பிரீமியர் லீக்.... இதை  இப்படி அழைப்பதை விட இந்தியன் பிக்ஸ்டு லீக் என்று அழைப்பதே சிறந்தது என்று நினைக்கிறன்.
           
            நன்கு கவனித்து இருந்தீர்களானால் சென்னை எப்படி எல்லாம் நிராகரிக்கப் படுகிறது என்று புரியும்.

             இ பி லீ  இந்தியாவிற்கு திரும்பி  வருகிறது அதை வரவேற்கும் விளம்பரத்தில் அணைத்து அணிகளின் தலைவர்களையும் க்ளோஸ் அப் ல் காட்டும்  போது தோனி மட்டும் அல்ல கும்ப்ளே கூட தவிர்க்கப் பட்டது தெரியும். இது சவுத் இந்தியாவை ஒதுக்கும் முயற்சி.

             இந்த இடுகை எழுதும் போது டாஸ் மட்டுமே போட பட்டுள்ள நிலையில் என் ஊகம் சரி என்றால் மும்பை இந்தியன்ஸ் தான் வெற்றி பெற போகிறார்கள்.

             அரை இறுதி ஆட்டதுக்கு தகுதி பெற வெற்றி பெற்ற போட்டியில் கடைசி சிக்ஸ் அடித்து விட்டு தோனி காட்டிய உணர்ச்சிகளில் தெரியும் பின்னணியில் நடந்த fixing  முயற்சி.....

              இறுதி போட்டிக்கு முன்பு நடந்த விழாவில் ஆரம்பத்தில் என்னவோ இரண்டு அணிகளின் உடை அணிந்தவர்களின் நடனம் நடந்தது என்னவோ உண்மை தான்...... ஆனால் அதற்கு பின் நடந்தது என்ன.....?

              நடனம் ஆட வந்த ஷாஹித் கபூர் அணித்து இருந்த மேல் சட்டையின் நிறம் என்ன? இடையிடையே பார்வையாளர்களின் பக்கம் சென்ற ஒளிப்பதிவு கருவி காட்டியது என்னவோ மும்பை இந்தியன் கொடிகளையும் அதை வைத்து இருந்தவர்களின் க்ளோஸ் அப் -களையும் தான்...... அட போனால் போகட்டும் என்று ஒரே ஒரு முறை மட்டும் மஞ்சள் சட்டை அணிந்திருந்தவர்களின்  தூர காட்சியை காண்பித்தார்கள்.....

            நடுவில் வந்த பெரிய மட்டை பிடித்த உருவ பொம்மை அணிந்து இருந்த கால் தடுப்பு அட்டையின்  நிறம் என்ன?

            ஆகவே நண்பர்களே இந்தியன் பிரீமியர் லீக் -ஐ  இந்தியன் பிக்ஸ்டு லீக் என்று அழைப்பதில் தப்பு ஒன்றும் இல்லை என்றே நினைக்கிறேன்......

             இது காலம் கடந்த இடுகை என்று கூட மனதில் தோன்றுகிறது.... பரவாயில்லை.....

செவ்வாய், 9 மார்ச், 2010

என் மனதில் எழும் சில கேள்விகள்......

 1. எப்பொழுதும் மேல் வரிசை ஆட்டக்காரர்களை ஆட்டமிழக்க செய்து விடும் இந்திய பந்து வீச்சாளர்கள் கீழ் வரிசை ஆட்டக்காரர்களை ஆட்டமிழக்க செய்ய தட்டு தடுமாறுவது ஏன் ?
2. விளம்பரங்களில் தொலைக்காட்சி பெட்டி மற்றும் D.T.H விளம்பரங்களின் போது மற்ற தொலைக்காட்சி பெட்டிகளை மற்றும் கேபிள்  இணைப்புகளை விட துல்லியமான காட்சியை தருவதாக சொல்லும் போது  அதை பார்க்கும் பலர் விளம்பரத்தில் வரும் தொலைக்காட்சி பெட்டி மற்றும் D.T.H ஐ  பயன் படுத்தாதவர்கள் தான் என்பதை மறந்து விடுவது ஏன்?

3.  தென் ஆப்பிரிக்கா உடன் ஆன கிரிக்கெட் போட்டிகளுக்கு முன் திரு. ஹர்பஜன் சிங் ஒரு பேட்டியில் நாங்கள் முழு திறமையுடன் விளையாடினால்  வெற்றி பெறுவோம் என்று கூறியிருக்கிறார் , அப்படி என்றால் அரை குறை திறமையுடன் கூட விளையாடுவார்களா?

4. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்திலும் நிகழ்ச்சிகளின் போது வரும் ஒலி அளவு எப்போதும் விளம்பரங்களின் போது வரும் ஒலி அளவை விட குறைவாகவே இருப்பது ஏன்?

5. பேருந்துகளில் பயணசீட்டு வாங்கும் போது 25 பைசா மற்றும்  ௫௦ பைசா மீதி தரும் நிலைகளில் சில நடத்துனர்கள் அதை தருவதில்லை, அதே போல் நாம் 25 பைசா மற்றும்  50 பைசா குறைவாக தந்தால் அதை அந்த சில நடத்துனர்கள் பெற்றுக்கொள்வார்களா?

சனி, 26 டிசம்பர், 2009

vettaikaaran vimarsanathin vimarsanam

                விஜய் பற்றி எனது வலைபதிவில் எழுத கூடாது என்று இருந்தேன், எழுத வைத்து விட்டார்கள் .
               ஒரு காலத்தில் ஆனந்தவிகடன் திரை விமர்சனம் என்பது திரை உலக்தினரே பாராட்டும் ஒரு சிறந்த பகுதியாக இருந்தது. சிறந்த நடிகர்களும் இயக்குனர்களும் தங்களது படங்களுக்கு அது ஒரு உரைகல்லாக இருந்ததாக பேட்டிகளில் கூறுவார்கள் .ஆனால் இப்போது .........?
              சர்வ சாதாரணமாக அணைத்து படங்களுக்கும் 40 மதிப்பெண்கள் வழங்குவது என்பது நடந்து வருகிறது .அட பாராட்டி எழுதி 40  மதிப்பெண்கள் வழங்கினால் கூட சரி போனால் போகுது என்று விட்டு விடலாம் , ஆரம்பம் முதல் கடைசி வரை அது சரி இல்லை இது மொக்கை என்று சொல்லி விட்டு மதிப்பெண்கள் மட்டும் வாரி வழங்குவது என்பது மனதுக்கு பொறுக்கவில்லை ....
             வேட்டைக்காரன் விமர்சனத்தில் ஒரே ஒரு இடத்தில மட்டும் விஜய் யை  பாராட்டுவது போல பாராட்டி விட்டு பின் காலை வாரி விடுகிறார்கள் ..... சத்யனை மட்டும் தான் பாராட்டுகிறார்கள் .... ஆரம்பத்தில் நான்கு படங்களின் கலவை தான் இது என்றும், விஜய் படங்களின் பழைய மசாலா தான் என்றும் , வில்லன்கள் காட்டு கத்து கத்துகிறார்கள் என்றும் ,  கதாநாயகி ஆன்ட்டி போல இருக்கிறார் என்றும் ,லாஜிக் இல்லை என்றும் , விஜய் யின் நடனமும் நன்றாக இல்லை என்றும், பார்த்து சலித்த பழைய புலி என்றும், உறுமுவது இருமுவது போல உள்ளது என்றும் சொல்லி விட்டு மதிப்பெண் மட்டும் 38 வழங்குவது எந்த ஊர் நியாயம் என்று விளங்க வில்லை .....
            ஒரு காலத்தில் மணிரத்தினம் படங்களும் பாலசந்தர் படங்களும் பாரதிராஜா படங்களும் சில உண்மையிலே நல்ல படங்களும் மட்டுமே பெற்று வந்த மதிப்பெண்கள் இப்போது சாதரணமாக அரைத்த மசாலாவையே அரைக்கும் படங்களும் பெறும் போது அந்த படங்களின் மதிப்பு குறைவது போல இருக்கிறது  ஆனந்தவிகடன் விமர்சன குழுவின் மதிப்பும் குறைந்து வருவது போல உள்ளது....
            

சனி, 12 செப்டம்பர், 2009

தேவதையின் கடைக்கண் பார்வை என் மீதும்....

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeVB9V7lY7OK_DluQft9elwRJvMllOLzOzFK7eOdNqUOz-CEyjJJNGPqpKUYV-VG-mxeNnfj-HH1TVrNp8QLPoV1UjvMJS2Hg0-EmqNshjaopwp0Vp4LZ4pIoCPWNR1bXLvpq9WH7CXYc/s400/angel-59.pngஇந்த படத்தில் உள்ள தேவதை நேற்று என் கனவில் வந்து உனக்கு வேண்டிய பத்து வரங்கள் கேள் , அத்துடன் அதை பதிவாக வெளியிடு என்று கூறியது .



நான் கேட்ட வரங்கள் இதோ .........




  1. தமிழகத்தில் மின்வெட்டு இனிமேல் இல்லை என்ற நல்ல செய்தி விரைவில் வர வேண்டும் .
  2. அடுத்த பொது தேர்தலில் நாம் தான் ஆட்சி அமைப்போம் என்று கூறி இன்னொரு புது கட்சி தமிழகத்தில் தோன்ற கூடாது.
  3. இந்திய திரு நாட்டில் பிறந்து வளர்ந்து இங்கேயே படித்து பின் வெளிநாட்டில் வேலை பார்த்து அங்கேயே இருந்து கொண்டு இந்தியாவை தரகுறைவாக கூறும் சிலர் திருந்த வேண்டும்.
  4. உலகத்தரமான கல்வி இந்தியாவில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.
  5. அரசியல்வாதிகள் கொடுக்கும் இலவசங்களையும் , பணத்தையும் நம்பி அவர்களுக்கு ஓட்டு போடும் நிலை மாறவேண்டும்.
  6. ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதி பிறந்த இந்த நாட்டில் ஜாதிகள் பெயரிலேயே கட்சிகள் ஆரம்பிக்கும் அவலம் ஒழிய வேண்டும்.
  7. எங்கு சென்றாலும் அடி வாங்கும் தமிழனின் நிலை மாற வேண்டும்.
  8. இமயமலையை விட ஒயரத்தில் அதிகமாக நிற்கும் விலைவாசி குறைய வேண்டும்.
  9. உலகநாயகனின் கனவு படைப்பான ''மருதநாயகம்'' உருப்பெற வேண்டும்.
  10. என்னைபோலவே உன்னிடம் வரம் கேட்டவர்களின் வரங்கள் பலிக்க வேண்டும்.

பின்குறிப்பு : அப்பாடா ஒரு வழியாக நண்பனின் வரமும் பலித்தது , நானும் ஒரு பதிவை எழுதியும் விட்டேன்.

ஞாயிறு, 17 மே, 2009

இந்தியன் ப்ரீமியர் லீக்

மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தலுக்கு முன்பாக பரபரப்பு கிளப்பிய ஒன்று இது . எனக்கு என்னவோ இது இந்தியாவில் கிரிக்கெட் அழிவதற்கான ஆரம்பம் என்று தோன்றுகிறது.

பணம், பணம்,பணம் ...... இது மட்டுமே குறிக்கோளாககொண்டு இயங்கி வரும் பி சி சி ஐ மற்ற எதையுமே கண்டு கொள்வதில்லை .

முதலாவதாக அதிகபடியான எண்ணிக்கையில் ஓய்வே இல்லாமல் போட்டிகளை நடத்துவது .

அடுத்து அரைகுறையான ஆடைகளுடன் வெளிநாட்டு அழகிகளை ஆட விடுவதும் , அதை நேரடி ஒளி பரப்பு செய்யும் கோணங்களும் ஆபாசமாகி கொண்டே வருகிறது .

இது போல பல விஷயங்கள் இருந்த போதும் , தற்சமயம் விளையாட்டு வீரர்கள் அமரும் டக் அவுட் ஏரியா வில் அந்த அணியின் உரிமையாளர்கள் வந்து அமர்ந்து கொள்வது போன்ற அசிங்கமான உதாரணங்கள் நடை பெற தொடங்கி உள்ளது .

பணம் கொடுக்கிறார்கள் என்று இனி மேல் அவர்களை மைதானத்தின் உள்ளே வந்து போட்டி நடக்கும் போதே வீரர்களை திட்டவோ , கட்டி பிடிக்கவோ அல்லது தடுப்பு அரண் அமைக்கவோ அனுமதிக்கும் காலம் தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.

செவ்வாய், 12 மே, 2009

கல்லூரி

எங்கிருந்தோ வந்தோம்
எப்படியோ வந்தோம்
எல்லோரும் சேர்ந்தோம்
என்னென்னவோ செய்தோம்
எத்தனையோ கற்றோம்
எங்கெங்கோ போனோம்
எத்தனையோ மாற்றம்
என்றுமே மாறாதது - கல்லூரி நினைவுகள் .....

பின்பற்றுபவர்கள்