சனி, 12 செப்டம்பர், 2009

தேவதையின் கடைக்கண் பார்வை என் மீதும்....

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeVB9V7lY7OK_DluQft9elwRJvMllOLzOzFK7eOdNqUOz-CEyjJJNGPqpKUYV-VG-mxeNnfj-HH1TVrNp8QLPoV1UjvMJS2Hg0-EmqNshjaopwp0Vp4LZ4pIoCPWNR1bXLvpq9WH7CXYc/s400/angel-59.pngஇந்த படத்தில் உள்ள தேவதை நேற்று என் கனவில் வந்து உனக்கு வேண்டிய பத்து வரங்கள் கேள் , அத்துடன் அதை பதிவாக வெளியிடு என்று கூறியது .



நான் கேட்ட வரங்கள் இதோ .........




  1. தமிழகத்தில் மின்வெட்டு இனிமேல் இல்லை என்ற நல்ல செய்தி விரைவில் வர வேண்டும் .
  2. அடுத்த பொது தேர்தலில் நாம் தான் ஆட்சி அமைப்போம் என்று கூறி இன்னொரு புது கட்சி தமிழகத்தில் தோன்ற கூடாது.
  3. இந்திய திரு நாட்டில் பிறந்து வளர்ந்து இங்கேயே படித்து பின் வெளிநாட்டில் வேலை பார்த்து அங்கேயே இருந்து கொண்டு இந்தியாவை தரகுறைவாக கூறும் சிலர் திருந்த வேண்டும்.
  4. உலகத்தரமான கல்வி இந்தியாவில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.
  5. அரசியல்வாதிகள் கொடுக்கும் இலவசங்களையும் , பணத்தையும் நம்பி அவர்களுக்கு ஓட்டு போடும் நிலை மாறவேண்டும்.
  6. ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதி பிறந்த இந்த நாட்டில் ஜாதிகள் பெயரிலேயே கட்சிகள் ஆரம்பிக்கும் அவலம் ஒழிய வேண்டும்.
  7. எங்கு சென்றாலும் அடி வாங்கும் தமிழனின் நிலை மாற வேண்டும்.
  8. இமயமலையை விட ஒயரத்தில் அதிகமாக நிற்கும் விலைவாசி குறைய வேண்டும்.
  9. உலகநாயகனின் கனவு படைப்பான ''மருதநாயகம்'' உருப்பெற வேண்டும்.
  10. என்னைபோலவே உன்னிடம் வரம் கேட்டவர்களின் வரங்கள் பலிக்க வேண்டும்.

பின்குறிப்பு : அப்பாடா ஒரு வழியாக நண்பனின் வரமும் பலித்தது , நானும் ஒரு பதிவை எழுதியும் விட்டேன்.

ஞாயிறு, 17 மே, 2009

இந்தியன் ப்ரீமியர் லீக்

மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தலுக்கு முன்பாக பரபரப்பு கிளப்பிய ஒன்று இது . எனக்கு என்னவோ இது இந்தியாவில் கிரிக்கெட் அழிவதற்கான ஆரம்பம் என்று தோன்றுகிறது.

பணம், பணம்,பணம் ...... இது மட்டுமே குறிக்கோளாககொண்டு இயங்கி வரும் பி சி சி ஐ மற்ற எதையுமே கண்டு கொள்வதில்லை .

முதலாவதாக அதிகபடியான எண்ணிக்கையில் ஓய்வே இல்லாமல் போட்டிகளை நடத்துவது .

அடுத்து அரைகுறையான ஆடைகளுடன் வெளிநாட்டு அழகிகளை ஆட விடுவதும் , அதை நேரடி ஒளி பரப்பு செய்யும் கோணங்களும் ஆபாசமாகி கொண்டே வருகிறது .

இது போல பல விஷயங்கள் இருந்த போதும் , தற்சமயம் விளையாட்டு வீரர்கள் அமரும் டக் அவுட் ஏரியா வில் அந்த அணியின் உரிமையாளர்கள் வந்து அமர்ந்து கொள்வது போன்ற அசிங்கமான உதாரணங்கள் நடை பெற தொடங்கி உள்ளது .

பணம் கொடுக்கிறார்கள் என்று இனி மேல் அவர்களை மைதானத்தின் உள்ளே வந்து போட்டி நடக்கும் போதே வீரர்களை திட்டவோ , கட்டி பிடிக்கவோ அல்லது தடுப்பு அரண் அமைக்கவோ அனுமதிக்கும் காலம் தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.

செவ்வாய், 12 மே, 2009

கல்லூரி

எங்கிருந்தோ வந்தோம்
எப்படியோ வந்தோம்
எல்லோரும் சேர்ந்தோம்
என்னென்னவோ செய்தோம்
எத்தனையோ கற்றோம்
எங்கெங்கோ போனோம்
எத்தனையோ மாற்றம்
என்றுமே மாறாதது - கல்லூரி நினைவுகள் .....

பின்பற்றுபவர்கள்